கர்தார்பூர் பாதை வழியாக காதலருடன் செல்ல முயற்சி

Added : டிச 04, 2019
Advertisement

லாகூர் : பஞ்சாபின் குர்தாஸ்புரில் உள்ள குருத்வாராவில் இருந்து, பாக்.,கின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களின் குருவான குருநானக்கின், 550வது பிறந்த நாளையொட்டி, கடந்த மாதம், 9ம் தேதி இந்தப் பாதை திறக்கப்பட்டது.விசா இல்லாமல், இந்தியர்கள் இந்த பாதை வழியாக கர்தார்பூர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த குருத்வாராவைத் தாண்டி மற்ற பகுதிகளுக்கு செல்லக் கூடாது.இந்த நிலையில், கர்தார்பூருக்கு சென்ற, இந்தியாவைச் சேர்ந்த மஞ்சித் கவுர் என்ற சீக்கிய பெண், குருத்வாராவில், பாக்.,கைச் சேர்ந்த தனது ஆண் நண்பரை சந்தித்துள்ளார்.

'பேஸ்புக்' சமூக வலை தளம் மூலம் இருவரும் பழகியுள்ளனர். பாக்.,கின் பைசலாபாதுக்கு, தனது நண்பருடன் செல்ல அந்தப் பெண் முயன்றுள்ளார். இதற்காக, பாக்., பெண்ணின் அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டிருந்தது.இதைக் கண்டுபிடித்த பாக்., அதிகாரிகள் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி, இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். அவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என, பாக்., அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், ஹரியானாவைச் சேர்ந்தவர் என, இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பெண்ணை அழைத்து செல்ல வந்த ஆண் நண்பர் மற்றும் அவருடன் வந்த இருவரிடம் பாக்., போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.கர்தார்பூர் சிறப்பு பாதை திறப்புக்கு பிறகு நடைபெறும் முதல் சம்பவம் இதுவாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X