டிவிஷன் ஹாக்கி: மின் வாரிய அணி வெற்றி| Dinamalar

டிவிஷன் ஹாக்கி: மின் வாரிய அணி வெற்றி

Added : டிச 04, 2019
Share
சென்னை:மாவட்ட அளவிலான ஹாக்கி டிவிஷன், 'லீக்' போட்டியில், தமிழக மின் வாரிய அணி வெற்றி பெற்றது.சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், மாவட்ட அளவிலான ஹாக்கி டிவிஷன், 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.இதில், சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அகாடமிகள், அரசு துறைகள், வங்கிகள், கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள்

சென்னை:மாவட்ட அளவிலான ஹாக்கி டிவிஷன், 'லீக்' போட்டியில், தமிழக மின் வாரிய அணி வெற்றி பெற்றது.

சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், மாவட்ட அளவிலான ஹாக்கி டிவிஷன், 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.இதில், சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அகாடமிகள், அரசு துறைகள், வங்கிகள், கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட, 48 அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று முன்தினம் நடந்த போட்டியில், இக்பால் ரீகிரியேஷன் ஹாக்கி கிளப் அணி, 5 -- 1 என்ற கோல் கணக்கில், லிங்கராஜ் மெமோரியல் ஹாக்கி கிளப்பிடம் வீழ்ந்தது. மற்றொரு போட்டியில், தமிழக மின்சார வாரிய அணி, 3 -- 1 என்ற கோல் கணக்கில், யாசின் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வென்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X