12 மணிநேரத்தில் கோயில் கட்டி சாதனை

Added : டிச 04, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பதி : ஆந்திராவில் 12 மணிநேரத்தில் காளி கோயில் கட்டி கிராமத்தினர் சாதனை படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் கர்ணுால் மாவட்டத்திலுள்ள பாதகந்துகூறு கிராமத்தில் வசிப்பவர்கள் ஒரு காளி கோயிலை கட்ட முடிவு செய்தனர். அதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். பின் ஆயத்த நிலையில் உள்ள சிற்ப வேலை செய்த சிமென்ட் பிளாக்குகளை வாங்கி வந்தனர். அதை பயன்படுத்தி கடந்த 1ம் தேதி காலை
 12 மணிநேரத்தில் கோயில் கட்டி சாதனை

திருப்பதி : ஆந்திராவில் 12 மணிநேரத்தில் காளி கோயில் கட்டி கிராமத்தினர் சாதனை படைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கர்ணுால் மாவட்டத்திலுள்ள பாதகந்துகூறு கிராமத்தில் வசிப்பவர்கள் ஒரு காளி கோயிலை கட்ட முடிவு செய்தனர். அதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். பின் ஆயத்த நிலையில் உள்ள சிற்ப வேலை செய்த சிமென்ட் பிளாக்குகளை வாங்கி வந்தனர். அதை பயன்படுத்தி கடந்த 1ம் தேதி காலை 8:00 மணிக்கு கோவில் கட்டும் பணியை துவங்கி அன்று இரவு 8:00 மணிக்கு கட்டப்பணியை நிறைவு செய்தனர்.இப்பணியில் 20 சிற்பிகள் 100 கிராமவாசிகள் பங்கு கொண்டனர்.

பல மாதங்கள் முயன்று கட்ட வேண்டிய கோயிலை அவர்கள் 12 மணிநேரத்தில் கட்டி முடித்து சாதனை செய்தனர். டிச.6ம் தேதி கோயிலில் காளி சிலை பிரதிஷ்டை நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201915:08:59 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
10-டிச-201910:15:00 IST Report Abuse
Swaminathan Nath வாழ்த்துக்கள், உங்கள் இறை பணி மேலும் ஓங்கட்டும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X