சென்னை:தேசிய அளவிலான, 'பெஞ்ச் பிரஸ்' சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீராங்கனை ஆர்த்தி அருண் தங்கம் வென்றார்.
தேசிய அளவிலான, 'பெஞ்ச் பிரஸ்' சாம்பியன்ஷிப் போட்டி, டில்லியில், சமீபத்தில் நடந்தது. பளு துாக்குதலில் ஒரு பிரிவான, இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர் -- வீராங்கனையர் பங்கேற்றனர்.இதில், 72 கிலோ, எம்.1., பிரிவில், தமிழகம் சார்பில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆர்த்தி அருண் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும், அவர் இந்த போட்டியில், 'சிறந்த லிப்டர்' விருதையும் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பல்வேறு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 2020ல் நடக்க உள்ள, ஆசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.