பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு உத்தரவால் 75 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி

Added : டிச 04, 2019
Advertisement
 மத்திய அரசு உத்தரவால் 75 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி

சென்னை : மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் வெங்காய சாகுபடி பரப்பை 75 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கிலோ பெரிய வெங்காயம் 100 - 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ 160 - 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியுள்ளது. இந்த வெங்காயம் வந்து சேருவதற்குள் ஜனவரி மாதம் கடந்து விடும். இந்நிலையில் நாடு முழுவதும் வெங்காயம் சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் மத்திய அமைச்சரவை செயலக உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினர். தமிழக தலைமை செயலர் சண்முகமும் இந்த ஆலோசனையில் பங்கேற்றார். இதைதொடர்ந்து தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோரை அழைத்து வெங்காய சாகுபடி பரப்பை அதிகரிக்க சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அதனால் வெங்காய சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை நாமக்கல், பெரம்பலுார், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வெங்காயம் சாகுபடி நடக்கிறது. தற்போது இம்மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடந்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து கூடுதலாக 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட உள்ளது.இதற்காக விவசாயிகளுக்கு விதைகள் இயற்கை உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், மானிய விலையில் வழங்கும் பணிகள் நேற்று முதல் துவங்கி உள்ளன.

நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் இலவசமாக அமைத்து தரப்பட உள்ளன.புதிதாக சாகுபடி செய்யும் பயிர்களில் 60 நாட்களில் வெங்காயம் அறுவடைக்கு தயாராகி விடும். இதில் 60 சதவீதம் சின்ன வெங்காயம் 40 சதவீதம் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X