பெண் மருத்துவரின் புகைப்படங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு 'நோட்டீஸ்'

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, எரித்து கொல்லப்பட்ட, கால்நடை பெண் மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட பத்திரிகை, 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களுக்கு, போலீசார் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.

தெலுங்கானாவில், மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த, 25 வயதான, கால்நடை பெண் மருத்துவர் ஒருவர், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, நான்கு லாரி ஓட்டுனர்களை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம் மற்றும் விசாரணை தொடர்பான ஆவணங்களை, சில பத்திரிகைகள், 'டிவி' மற்றும் சமூக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்த செயலை உடனடியாக நிறுத்துமாறு, சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு, போலீசார் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். மேலும், குற்றவாளிகளின் 'புகைப்படங்கள், 'வீடியோ'க்களை தொடர்ந்து வெளியிடுவது, விசாரணையின் போக்கை பாதிக்கும் என்பதால், அதையும் நிறுத்திக் கொள்ளுமாறு, ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
04-டிச-201902:14:44 IST Report Abuse
.Dr.A.Joseph பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை வெளியிட்டது மிகப்பெரிய தவறு.எதிர்காலங்களை மனதில் கொள்வது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X