சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.21.56 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டு கடத்த முயன்ற 2 பெண்களிடம் விசாரணை

Added : டிச 04, 2019
Share
Advertisement
திருச்சி : திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு 21.56 ரூபாய் மதிப்புள்ள இந்திய மற்றும் மலேசியா ரூபாய் நோட்டுக்களை கடத்த முயன்ற இரு பெண்களிடம் விசாரணை நடக்கிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ்

திருச்சி : திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு 21.56 ரூபாய் மதிப்புள்ள இந்திய மற்றும் மலேசியா ரூபாய் நோட்டுக்களை கடத்த முயன்ற இரு பெண்களிடம் விசாரணை நடக்கிறது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த இரு பெண்களின் கைப்பைகளை சோதனையிடப்பட்டது.

அவர்களிடம் இந்திய ரூபாய் 2 ஆயிரம் நோட்டாக 8.26 லட்சம் ரூபாயும் இந்திய மதிப்பில் 13.30 லட்சம் ரூபாய் மலேசியா நோட்டுக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்த பதர்பாஸ்மின் 43 தஷினாபேகம் 34 ஆகிய இருவரிடமும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X