அரசியல் செய்தி

தமிழ்நாடு

திராவிட அரசியல் எது? எச்.ராஜா விளக்கம்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை : 'லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான், திராவிட அரசியல்' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஹிந்து மத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத கூட்டங்களில் பங்கேற்பது; சாராய ஆலை நடத்திக் கொண்டே, டாஸ்மாக்கை மூட சொல்வது; ஹிந்தி கற்றுத் தரும் பள்ளிகள் நடத்தியபடி, ஹிந்தியை எதிர்ப்பது தான் திராவிட அரசியல்.தன்னுடைய குழந்தைகளை, பல லட்சங்களை கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு, அதே கல்வியை, கிராமத்து ஏழைகளுக்கு, இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும், லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்துக் கொண்டு, ஊழலை நடமாட விட மாட்டோம் என்பது தான், திராவிட அரசியல். இவ்வாறு, எச்.ராஜா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X