சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை தாக்கி ரூ.55 லட்சம் கொள்ளை

Added : டிச 04, 2019
Advertisement

ஆத்துார் : தலைவாசல் அருகே, பைக்கில் சென்ற விவசாயியை தாக்கி, 55 லட்சம் ரூபாயை, ஆறு பேர் கும்பல் பறித்துச் சென்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, நாவக்குறிச்சியைச் சேர்ந்தவர், சின்னதுரை, 38. விவசாயியான இவர், நேற்று முன்தினம், சென்னை, கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினரிடம், 55 லட்சம் ரூபாய் வாங்கி, இரவு, 10:40 மணிக்கு, அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார்.நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, நத்தக்கரை சுங்கச்சாவடியில் இறங்கி, அங்கு ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த தன், 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் புறப்பட்டார்.

சிறிது துாரத்தில், இரு பைக்குகளில் வந்த ஆறு பேர் கும்பல், அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மிளகாய் பொடி துாவி, கீழே தள்ளி, கத்தியால் காலில் குத்தியது. மேலும், அவரிடம் இருந்த, 55 லட்சம் ரூபாயை பறித்து, தப்பியது.போலீசார் கூறுகையில், 'சென்னையில் இருந்து கும்பல் பின்தொடர்ந்ததா என, தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது' என்றனர்.கேமரா 'ஆப்'நத்தக்கரை சுங்கச்சாவடியில், சின்னதுரை, பஸ்சிலிருந்து பையுடன் இறங்கியதற்கான காட்சிகள் பதிவாகியுள்ளன.

அங்குள்ள கடைகளிலிருந்த 'சிசிடிவி' கேமராக்கள், இரு நாளாக இயங்காமல் இருந்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், சின்னதுரையை பின்தொடர்ந்து சென்றவர்கள் யார் என்பதை கண்டறிவதில், போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், பையில் பணமிருந்தது உண்மையா, இல்லை பணம் பதுக்கப்பட்டு, கொள்ளை என திசை திருப்பப்படுகிறதா என்ற கோணத்திலும், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X