பொது செய்தி

தமிழ்நாடு

சூடுபிடிக்க துவங்கியது மரவள்ளிக்கிழங்கு விற்பனை

Added : டிச 04, 2019
Share
Advertisement
மருத்துவ குணம் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு விற்பனை, சென்னையில் சூடுபிடித்துள்ளது. மரவள்ளிக் கிழங்கு சாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது, பல நாடுகளில் மக்கள்,இந்த கிழங்கை சாப்பிட்டே உயிர் வாழ்ந்துள்ளனர்.இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படுகிறது. உணவு தவிர, இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்கள் உள்ளன.மரவள்ளிக்கிழங்கில் உள்ள
 சூடுபிடிக்க துவங்கியது மரவள்ளிக்கிழங்கு விற்பனை

மருத்துவ குணம் நிறைந்த மரவள்ளிக்கிழங்கு விற்பனை, சென்னையில் சூடுபிடித்துள்ளது. மரவள்ளிக் கிழங்கு சாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது, பல நாடுகளில் மக்கள்,இந்த கிழங்கை சாப்பிட்டே உயிர் வாழ்ந்துள்ளனர்.

இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படுகிறது. உணவு தவிர, இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்கள் உள்ளன.மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது, உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது.குடல் வலி, குடல் புற்று நோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இக்கிழங்கில் காணப்படும் வைட்டமின்கள், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு, நரம்புக் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.மரவள்ளிக் கிழங்கில் உள்ள இரும்புச் சத்து, சிவப்பணு உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ரத்தசோகை குணமாகிறது.

மரவள்ளியானது அதிகளவு கார்போ ஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால், உடல் எடை அதிகரிக்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளது.இவ்வளவு மருத்துவ மகத்துவம் கொண்ட மரவள்ளிக்கிழங்கு, தமிழகத்தில், கடலுார், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிகளவில் பயிரிடப்படுகிறது.நவம்பர் மாதம் முதல் அதன் சீசன் துவங்கியுள்ள நிலையில், சென்னை நகரில் மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X