பர்வேஷ் முஷாரபுக்கு மாரடைப்பு

Added : டிச 04, 2019
Advertisement
 பர்வேஷ் முஷாரபுக்கு மாரடைப்பு

துபாய் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், மாரடைப்பு காரணமாக, துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப், 76. கடந்த, 2007ல், இவர் அதிபராக இருந்தபோது, பாகிஸ்தானில் அவரச நிலையை அமல் படுத்தினார். இது தொடர்பாக, அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகருக்கு சென்ற அவர், 2016ல் இருந்து, அங்கேயே வசித்து வருகிறார்.முஷாரப் மீதான தேச துரோக வழக்கில், சமீபத்தில் தீர்ப்பளிக்கப்படுவதாக இருந்தது.

ஆனால், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்தத்துடன், 'டிச., 5ல், முஷாரப், நீதிமன்றத்தில் ஆஜராகி, தன் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, துபாயில், முஷாரப்புக்கு நேற்று திடீனெ உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அவர் வசித்த இடத்துக்கு சென்ற டாக்டர்கள், சிகிச்சை அளித்தனர். அப்போது, முஷாரபுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.தேச துரோக வழக்கில், முஷாரப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்மாக மரண தண்டனை விதிக்கப்படும்.முன்னாள் அதிபருக்கு ஜாமின்?பாக்,, முன்னாள் பிரதமரான, மறைந்த பெனசிரின் கணவரும், முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆறு மாதங்களாக, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் உடல்நிலை மோசமடைந்திருப்பதால், ஜாமின் அளிக்கும்படி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.விமானத்தில் மூவருக்குஉடல்நலக்குறைவு சவுதி அரேபியாவிலிருந்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு, நேற்று பாக்., ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில், 225 பேர் பயணித்தனர்.

விமானம், கராச்சியை நெருங்கும்போது, ஒரு தம்பதி மற்றும் ஒரு பெண்ணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.இதையடுத்து, விமானம், அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. அதற்குள், மகாலா பீவி என்ற பெண், இறந்து விட்டார். தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X