சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணி நியமனம் கோரி செவிலியர் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை : பணி நியமனம் கோரி, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தை, 200க்கும் மேற்பட்ட செவிலியர் உதவியாளர்கள், நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்திய பின், கலைந்து சென்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2009ல், செவிலியர் உதவியாளர் பயிற்சி படிப்பு துவங்கப்பட்டது. அப்போது, படிப்பை முடித்த, 800 பேருக்கு அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. பின், 2010 முதல் படித்த, 8,000 பேர் வேலையின்றி உள்ளோம்.காலி பணியிடங்கள் இருந்தும், பணி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், தனியார் கல்லுாரிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டு செவிலியர் உதவியாளர் பயிற்சி படிப்பை முடித்தும், தகுதி யில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவ கல்லுாரிகளில் பயிற்சி பெற்ற எங்களை, முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X