லண்டன் தாக்குதல் செய்தி எதிரொலி

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
இஸ்லாமாபத் : லண்டன் பாலத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 'கொலையாளி, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்' என, செய்தி வெளியிட்ட, அந்நாட்டு பத்திரிகை அலுவலகத்தை, போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டன். சமீபத்தில், இங்குள்ள பாலம் அருகே நடந்து சென்றவர்களை, உஸ்மான் கான் என்பவர், சரமாரியாக

இஸ்லாமாபத் : லண்டன் பாலத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 'கொலையாளி, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்' என, செய்தி வெளியிட்ட, அந்நாட்டு பத்திரிகை அலுவலகத்தை, போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டன். சமீபத்தில், இங்குள்ள பாலம் அருகே நடந்து சென்றவர்களை, உஸ்மான் கான் என்பவர், சரமாரியாக கத்தியால் குத்தினார். அதில், இருவர் உயிரிழந்தனர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து, பிரிட்டன் பத்திரிகைகள், 'உஸ்மான் கான், பிரிட்டனில் பிறந்து, வளர்ந்தவர்' என, செய்தி வெளியிட்டன.ஆனால், பாக்., பத்திரிகையான, 'டான்', 'உஸ்மான் கான், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்' என, கொட்டை எழுத்தில், முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், நேற்று, இஸ்லாமாபாத்தில், 'டான்' பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, அலுவலகத்திற்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் யாரையும் அனுமதிக்கவில்லை.இதையடுத்து, பாதுகாவலர்கள், அலுவலகத்திற்கு உள்ளே இருப்பவர்களை காப்பாற்ற, வாயில் கதவுகளை மூடினர்.போராட்டக்காரர்கள், ஆவேசமாக கோஷமிட்டபடி, அலுவலகத்தை சுற்றி வளைத்ததை அடுத்து, வன்முறை ஏற்படும் சூழல் உண்டானது. இதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகள், ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சு நடத்தினர்.

'பத்திரிகை ஆசியர் மன்னிப்பு கேட்டால் தான் இடத்தை விட்டு நகர்வோம்' என, போராட்டக் காரர்கள் கூறினர். இறுதியில், பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள், மூன்று மணி நேர முற்றுகையை விலக்கிக் கொண்டனர்.இந்த சம்பவம் குறித்து, பாக்., மக்கள் கட்சி தலைவர், சர்தாரி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாக்.,கிற்கு நிதியுதவி நிறுத்தம்ஆஸ்திரேலியா அதிரடிஆஸ்திரேலிய அரசு, பாகிஸ்தானுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த உள்ளது. 'நடப்பு நிதியாண்டில், பாக்.,கிற்கு அளிக்கும் நிதியுதவி, 1.90 கோடி டாலராக குறைக்கப்படும். 2020--21ல், நிதியுதவி முற்றிலுமாக நிறுத்தப்படும். இதில், ஏழைப் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டமும் அடங்கும்.

அதேசமயம், பிராந்திய மற்றும் சர்வதேச திட்டங்களின் கீழ், பாக்.,கிற்கு நிதியுதவி தொடரும' என, ஆஸ்திரேலிய வெளிவிவகாரங்கள் மற்றும் வர்த்தக துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, 2013 முதல், சர்வதேச நிதியுதவியை, 27 சதவீதத்தில் இருந்து, 0.82 சதவீதமாக குறைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-201915:49:58 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ரெண்டு பேருமே இந்தியாவுக்கு எதிரானவங்க தான். நாம் தள்ளி இருப்பதே நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X