சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேகர் ரெட்டிக்கு சொந்தமான அலுவலக கட்டடத்தில் தீ விபத்து

Added : டிச 04, 2019
Advertisement
 சேகர் ரெட்டிக்கு சொந்தமான அலுவலக கட்டடத்தில்  தீ விபத்து

சென்னை:பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான, தி.நகரில் உள்ள அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தி.நகர், விஜயராகவா சாலையில், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான, நான்கு மாடி கட்டடம் உள்ளது. இவர், அரசு சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த கட்டடத்தின், 4வது மாடியில், சாலை ஒப்பந்தங்களை கையாளும் அலுவலகம் இயங்கி வருகிறது. மற்ற மூன்று மாடிகளும், காலியாக உள்ளன. நேற்று காலை, 8:30 மணியளவில், அந்த அலுவலகத்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது

தகவலறிந்து, தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து, தீயணைப்பு துறை வாகனங்கள் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால், 'ஸ்கை லிப்ட்' வாகனத்தின் உதவியுடன், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தில், அந்த அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும், தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து, பாண்டிபஜார் போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, சேகர் ரெட்டிக்கு சொந்தமான, வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்திலும், அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X