பொது செய்தி

தமிழ்நாடு

பீட்டர்ஸ் சாலையில் அடுக்குமாடி வணிக வளாகம்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை, ராயப்பேட்டையில், 3.83 ஏக்கரில், அடுக்குமாடி வணிகம் உள்ளிட்டவை கட்ட, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

சென்னையில், மயிலாப்பூர், ராயப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதில், சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது.

இதில், பெரும்பாலான இடங்களில், பழைய குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கைகளை, வீட்டுவசதி வாரியம் துவக்கியுள்ளது. இவ்வகையில், ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை காலனி பகுதியில் உள்ள நிலத்தை, வணிக வளாகமாக மேம்படுத்த, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பீட்டர்ஸ் சாலை காலனியில், 3.84 ஏக்கர் நிலம், இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 5.43 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு, அடுக்குமாடி வணிக அலுவலக வளாகம் கட்டப்பட உள்ளது.இதற்கான வடிவமைப்பு, வரைபடம் தயாரிப்பதற்கான கலந்தாலோசனை நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. நிலத்தின் பரப்பளவில், மூன்று மடங்கு பரப்பளவுக்கு, புதிய கட்டடம் அமைய உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் கலந்தாலோசகர் தேர்வு பணிகளை முடிக்க, திட்டமிட்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X