வறுமையின் கொடுமையால் மண் சாப்பிட்ட குழந்தைகள்

Added : டிச 04, 2019
Advertisement

திருவனந்தபுரம் : வறுமையின் கொடுமையால், ஒரு தாயின் குழந்தைகள் மண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த அவலம், கேரளாவையே உலுக்கியுள்ளது.

கேரளாவில், தலைநகர் திருவனந்தபுரத்தில், தலைமைச் செயலகம் அருகே உள்ள, உப்ளமூடு பாலத்தின் கீழ், குடிசை ஒன்றில், ஸ்ரீதேவி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு, ஆறு குழந்தைகள். கணவர் கூலித் தொழிலாளி; சரியான குடிகாரர்.வறுமையிலும், பசியிலும் வாடிய ஸ்ரீதேவிக்கு, தன் குழந்தைகளுக்கு தாய்ப் பால் கூட தர இயலாத வகையில், உடல்நிலை இருந்தது.ஒரு நாள், குழந்தைகள், பசிக் கொடுமை தாங்காமல், மண்ணை அள்ளி அள்ளி சாப்பிடுவதைக் கண்டு பதபதைத்த, ஸ்ரீதேவி, தன் குழந்தைகளை எடுத்துக் கொள்ளுமாறு, கேரள அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, அரசின் சிறுவர் நலக் குழு, சுசீலாவின் நான்கு குழந்தைகளை தன் பாதுகாப்பில் எடுத்து, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவை ஏற்றுக் கொண்டது.இரு குழந்தைகளுடன், ஸ்ரீதேவியை, அரசு ஆதரவு இல்லத்தில் தங்க வைத்தது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் சோகக் கதை, தற்போது ஊடகங்களில் வெளியாகி, கேரளாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதேசமயம், பல தரப்பில் இருந்தும், ஸ்ரீதேவி குடும்பத்திற்கு, நிதியுதவியும், ஆதரவும் குவிந்து வருகிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர், ஸ்ரீகுமார், ஸ்ரீதேவியை நேரில் சந்தித்து, மாநகராட்சியில தற்காலிக வேலைக்கான உத்தரவை வழங்கினார். அத்துடன், 'வீடற்றோருக்கான வீடு' திட்டத்தில், ஒரு வீடும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே காங்., மூத்த தலைவர், ரமேஷ் சென்னிதாலா, ''வறுமை காரணமாக, குழந்தைகள் மண் உண்பது, கேரளாவுக்கே அவமானம். அரசு, வறுமையை ஒழிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X