சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்: புறநகர் விவசாயிகள் கவலை

Added : டிச 04, 2019
Advertisement
 கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்: புறநகர் விவசாயிகள் கவலை

தாம்பரம்:கன மழையால், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில், சம்பா பருவத்திற்காக நடவு செய்யப்பட்ட பயிர்கள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

சென்னை புறநகரில் உள்ள, சிட்லபாக்கம் வேளாண் விரிவாக்க மையத்தின் கீழ், வேங்கைவாசல், மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நுாத்தஞ்சேரி, ஒட்டியம்பாக்கம் உட்பட, 32 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 2,000 ஏக்கருக்கு மேல், விவசாயம் நடைபெறுகிறது.இப்பகுதி விவசாயிகள், 'பி.பி.டி., எனப்படும் பாபட்லா பொன்னி' ரக நெல்லை அதிகம் பயிரிடுகின்றனர்.

நடப்பாண்டு பருவமழை துவங்கியது முதல், புறநகரில் விவசாய பணிகள் தீவிரமடைந்து இருந்தன. பல இடங்களில், நாற்று நடும் பணிகள் முடிந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், மழைநீர் புகுந்து பயிர்கள் மூழ்கி உள்ளன.மாடம்பாக்கம் அடுத்த பதுவஞ்சேரியில், மழைநீர் புகுந்து, எட்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த, பாபட்லா பொன்னி ரக நெல் பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் கலக்கமடைந்து உள்ளனர்.

விவசாயி, ஸ்ரீபதி, 63 கூறியதாவது:கடந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால், இந்தாண்டு கைகொடுக்கும் என நம்பி, நெல் பயிரிட்டோம். தற்போது, அதிக மழை பொழிவினால், பயிர்கள் மூழ்கி உள்ளன.என்னை போலவே, மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை புறநகரை போலவே, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X