சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வறுமையின் கொடுமை

Added : டிச 04, 2019 | கருத்துகள் (13)
Advertisement
 வறுமையின் கொடுமை

திருநெல்வேலி : செங்கோட்டை அருகே, வறுமை காரணமாக, மகனை கொலை செய்த, ஆட்டோ ஓட்டுனர், தன் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை, கட்டளைகுடியிருப்பை சேர்ந்தவர், கந்தசாமி, 35; ஆட்டோ ஓட்டுனர். அவரது மனைவி இந்துமதி, 30. இவர்களுக்கு சின்னமுத்திரன், 6, ஏகாந்தமூர்த்தி, 2, என, இரு மகன்கள்.மூத்த மகன், மனவளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த தால், மருத்துவத்திற்கு பணம் செலவழித்துள்ளனர். அவரது மனைவி, குடும்ப செலவுக்காக, சுயஉதவிகுழுக்களிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தந்தவர்கள், பணத்தை திரும்ப கேட்டு, நேற்று முன்தினம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மனமுடைந்த தம்பதி, நேற்று முன்தினம் இரவு, இளைய மகன் ஏகாந்த மூர்த்தியை விடுத்து, மூத்த மகன் சின்னமுத்திரனை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின் கணவனும், மனைவியும் விஷம் குடித்தனர். இதில், மனைவி இறந்தார்.'பிழைத்துக் கொள்வோம்' என்ற பயத்தில், கந்தசாமி துாக்கிட்டு தற்கொலை செய்தார். சாவதற்கு முன், வீட்டின் சுவரில், எங்கள் சாவுக்கு, வறுமை மட்டும் காரணம்' என, எழுதிவைத்துள்ளனர்.

நேற்று காலை, நீண்டநேரமாக வீடு திறக்காததால், அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது, மூவரும் இறந்து கிடந்தது, தெரிய வந்தது. புளியரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
06-டிச-201918:50:50 IST Report Abuse
Jayvee ஆட்டோக்காரருக்கு வறுமையா.. ? வேறு ஏதாவது காரணம் இருக்கும் ..
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
07-டிச-201914:00:14 IST Report Abuse
selvaKP...
Rate this:
Share this comment
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
06-டிச-201911:31:45 IST Report Abuse
Thalaivar Rasigan திராவிட அரசுகளே - மிக்சி - கிரைண்டர் கொடுங்க. இது போன்ற நோய்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யாதீர்கள். அப்போதான் நிறைய பேர் இது போல நொந்து போய் தற்கொலை செய்து கொள்ள வசதியாக இருக்கும்.
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
07-டிச-201914:01:40 IST Report Abuse
selvaஓ நீங்க...
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-டிச-201922:06:42 IST Report Abuse
Matt P மன வளர்ச்சி குன்றிய மகனின் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கி பணம் செலவழித்ததால் மேலும் வறுமைக்குள்ளாகி தற்கொலை முடிவை எடுத்து குடும்பத்தை முடித்து விட்டார்...இப்படிப்பட்ட சாவுகள் மேலும் ஏற்படாமல் இருக்க, அரசாங்கம் ஏழை எளியவர்களின்நோய் செலவுக்கு உதவலாமே. டிவி mixie போன்ற இலவசங்கள் கொடுப்பதற்கும் உண்டாகும் செலவில் ...தற்கொலை தவறு என்றாலும் தற்கொலை செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் . அதுவும் கண்ணுக்கு கண்ணாக வளர்த்த தன பிள்ளைகளையே கொன்றுவிட்டு . ,,,பணத்தை கடன் கொடுப்பவர்கள் ஆதாரம் இருக்கும் நிலையில் வாக்குவாதத்தை தவிர்த்து, சட்டப்படி எதிர்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X