கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் தீட்சிதருக்கு ஐகோர்ட் முன்ஜாமின்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை : பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், சிதம்பரம் கோவில் தீட்சிதருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், முக்குருணி விநாயகர் சன்னதியில், அர்ச்சனை செய்யக் கோரிய பெண்ணை தாக்கியதாக, தீட்சிதர் தர்ஷனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தாக்கல் செய்த மனு:கோவில் நடை சாத்தும் நேரத்தில், ஒரு பெண் மற்றும் அவருடன் வந்தவர்கள், பூஜை செய்யும்படி வலியுறுத்தினர்; நானும் பூஜை செய்தேன். பூஜை செய்தது கேட்கவில்லை என்பதால், மீண்டும் நடத்தும்படி கேட்டனர். ஏற்கனவே தாமதமாகி விட்டதால், நடை சாத்தும் நேரம் என கூறினேன். அப்போது, அந்தப் பெண் கையை உயர்த்தினார்.

தற்காப்புக்காக, நான் தள்ளி விட்டேன். நடந்த சம்பவத்தை கூறாமல், வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. நான், அந்தப் பெண்ணை அடிக்கவில்லை; அவர் கீழே விழவும் இல்லை. வாய் வழி சண்டை தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை பின்பற்றுகிறேன்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதி சேஷசாயி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனைகள் விதித்து, முன்ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X