சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவசுப்பிரமணியம் மீது பிரிவு 304 (2)

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement
சிவசுப்பிரமணியம், மேட்டுப்பாளையத்தில், சுவர் விழுந்து, பலி,304 (2) பிரிவு

கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில், சுவர் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது, முதலில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 'ஏ'ன்படி வழக்கு பதியப்பட்டது. அஜாக்கிரதையாக ஒரு செயலை செய்து, அதன் மூலம் யாருக்காவது மரணம் ஏற்படுத்தும் குற்ற சம்பவங்கள், இந்த சட்டப்பிரிவில் விசாரிக்கப்படும். இதற்கு அதிகபட்சமாக, அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால், நேற்று இந்த வழக்கில் 304 'ஏ' பிரிவுக்கு பதிலாக, 304 (2) பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூறுவது என்னவெனில், தன் செயலால் ஒருவருக்கு மரணம் ஏற்படும் என்று தெரிந்தே ஒரு குற்றச்செயலை செய்வதாகும். இந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-டிச-201908:28:13 IST Report Abuse
ஆரூர் ரங் பற்பல ஆண்டுகளாகவே சென்னையிலுல்ள முக்கியமாக பாரிமுனை திநகர் உஸ்மான் ரோடு ,ரங்கநாதன் தெரு பகுதிகளில் ஆயிரக்கணக்கான விதிமீறல் ஆபத்தான கட்டிடங்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுக்கொண்டே இருக்கிறது பல இடிபாடுகளை தீவிபத்துகளும் இறப்புகளும் நிகழ்ந்தபின்னும் ஒரே ஒரு கட்டிடம் கூட இடிக்கப்படவில்லை. கோர்ட் உத்தரவை அறிந்த போதும் அங்கு மக்கள் போவதை நிறுத்துவதில்லை எந்தக் கட்சியாவது விதிமீறல் கட்டிடங்கள் இடிக்க போராட்டம் நடத்தியதுண்டா? பொறுப்பற்ற வாக்குவங்கி அரசும் அறிவற்ற பொதுஜனமும் இருக்கும்வரை நாடு பாதுகாப்பற்ற தேசமாகத்தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X