பொது செய்தி

தமிழ்நாடு

8,000 பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு

Added : டிச 04, 2019
Share
Advertisement
சென்னை : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல, நாடு முழுவதும் 78 ஆயிரத்து 569 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 8,000 பேர் விருப்ப ஓய்வை தேர்வு செய்துள்ளனர்.பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. இதில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும்

சென்னை : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல, நாடு முழுவதும் 78 ஆயிரத்து 569 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 8,000 பேர் விருப்ப ஓய்வை தேர்வு செய்துள்ளனர்.

பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தொலைத் தொடர்பு சேவை வழங்கி வருகிறது. இதில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல்.,லில் விருப்ப ஓய்வு திட்டம், நவ., 4ம் தேதி துவங்கப்பட்டது. இந்த திட்டம், நேற்று மாலை 5:30 மணி உடன் நிறைவடைந்தது. இதில், நாடு முழுவதும், 78 ஆயிரத்து 569 பேர் விருப்ப ஓய்வில் செல்ல, விருப்பம் தெரிவித்துள்ளனர். 5,237 பேர், தங்களின் விருப்ப ஓய்வு விண்ண்பத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

626 பேர், பின்னர் முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு திட்டம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 78 ஆயிரத்து 569 பேர், விருப்ப ஓய்வில் செல்ல தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில், சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டம் இரண்டும் சேர்த்து, 8,000த்திற்கும் அதிமானோர், விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X