தாம்பரத்திற்கு புது தாசில்தார் : இவராவது தாக்குபிடிப்பாரா?

Added : டிச 04, 2019
Advertisement

தாம்பரம்:தாம்பரம் தாலுகா அலுவலகத்தில், புதிய தாசில்தார் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து, 37வது மாவட்டமாக, செங்கல்பட்டு மாவட்டம், நவ., 29ல் உதயமானது.இதையடுத்து, தாம்பரம் தாசில்தாராக இருந்த ஏகாம்பரம், காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டார். புதிய தாசில்தார் நியமிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், மாவட்டத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் துவங்கி, இளநிலை உதவியாளர் வரை, 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராக இருந்த சரவணன், தாம்பரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.ஆறு மாதங்களில், தாம்பரம் தாலுகாவிற்கு, ஐந்து தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்டு, புதிய தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏராளமான கோப்புகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், இவராவது, தாம்பரத்தில் சில காலம் தாக்கு பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


எல்லாம் சிக்கல்!



தாம்பரம் புதிய தாசில்தாருக்கு, அவருக்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட வில்லை. அதை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வழங்க வேண்டும். அந்த பணியிடமும் காலியாக இருப்பதால், புதிய தாசில்தாருக்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை, காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளரே வழங்க வேண்டும் என, வருவாய்த் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X