சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.69 லட்சம் பாக்கி கோவில் கட்டடத்திற்கு, 'சீல்'

Added : டிச 04, 2019
Advertisement
 ரூ.69 லட்சம் பாக்கி கோவில் கட்டடத்திற்கு, 'சீல்'

சவுகார்பேட்டை:வாடகை பாக்கி செலுத்தாததால், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த, இனிப்பு தயாரிப்பு நிறுவன கட்டடத்திற்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

சவுகார்பேட்டை, வள்ளியப்பன் தெருவில் அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில்கள், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இக்கோவிலுக்கு சொந்தமாக, சவுக்கார்பேட்டை, தங்கசாலை தெருவில் உள்ள, 2,472 சதுரடி இடத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக, பன்சீதர் என் குப்தா என்பவர், இனிப்பு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்காக, 69 லட்ச ரூபாய், கட்டடத்திற்கு வாடகை பாக்கி வைத்தார். அறநிலையதுறை சார்பில், பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வாடகை பாக்கியை கட்ட வில்லை.

இதையடுத்து அறநிலையத் துறை உதவி கமிஷனர் கவெனிதா, கோவில் செயல் அலுவலர் ராதாமணி தலைமையிலான அதிகாரிகள், 10க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், நேற்று, இனிப்பு தயாரிப்பு நிறுவனம் இயங்கி வந்த கட்டடத்திற்கு, 'சீல்' வைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X