சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் தீக்கிரை

Added : டிச 04, 2019
Advertisement
 மின் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் தீக்கிரை

செங்குன்றம்::மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், குடோனில் வைத்திருந்த, வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாகின.

செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், பார்வதிபுரத்தில், புனேயைச் சேர்ந்த அஜய்சோனி, 54, என்பவர், கட்டில், மெத்தை உள்ளிட்ட, வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் வைத்திருந்தார்.ஜெய்ப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, விலை உயர்ந்த பொருட்கள், குடோனில் இருந்து, சென்னையின் மற்ற பகுதிகளுக்கு, விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.நேற்று காலை, 9:30 மணி அளவில், குடோனின் ஒரு பகுதியில் இருந்து, கரும்புகை வெளியேறியது.

இதையடுத்து, அஜய்சோனிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதற்குள், தீ மளமளவென பிடித்து, உள்ளே இருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வீட்டு உபயோகப் பொருட்கள் நாசமாயின . தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்துார் தீயணைப்பு நிலையத்தினர், மாலை, 4:30 மணி வரை போராடி, தீயை அணைத்தனர். மின் கசிவால், தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X