சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஹெராயின்' பயன்படுத்திய நால்வர் கைது

Added : டிச 04, 2019
Share
Advertisement
திருவொற்றியூர்:திருவொற்றியூரில், 'ஹெராயின்' போதை பொருள் வைத்திருந்த கல்லுாரி மாணவர் உட்பட, நால்வரை போலீசார் கைது செய்தனர்.திருவொற்றியூர் போலீசார், நேற்று, எண்ணுார் விரைவுச்சாலை, ஒண்டிக்குப்பம் அருகே, ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்தவர்களிடம் சோதனையிட்டபோது, 'ஹெராயின்' போதைப் பொருள் பாக்கெட்டுகள் சிக்கின.அவர்களிடம் நடத்திய விசாரணையில், சூளைமேடைச்

திருவொற்றியூர்:திருவொற்றியூரில், 'ஹெராயின்' போதை பொருள் வைத்திருந்த கல்லுாரி மாணவர் உட்பட, நால்வரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் போலீசார், நேற்று, எண்ணுார் விரைவுச்சாலை, ஒண்டிக்குப்பம் அருகே, ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்தவர்களிடம் சோதனையிட்டபோது, 'ஹெராயின்' போதைப் பொருள் பாக்கெட்டுகள் சிக்கின.அவர்களிடம் நடத்திய விசாரணையில், சூளைமேடைச் சேர்ந்த ஆகாஷ், 23, அண்ணாநகரைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் தாமோதரன், 20, குன்றத்துாரைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள், 25, அரும்பாக்கத்தை சேர்ந்த பிரின்ஸ், 23, என்பது தெரிய வந்தது.

நண்பர்களான நால்வரும், பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, காரில் திரும்பும்போது, ஹெராயின் பாக்கெட் வாங்க, திருவொற்றியூர் வந்தது தெரிந்தது.நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 30 கிராம் எடை கொண்ட, 28 பாக்கெட் ஹெராயின், கால் கிலோ கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நால்வரையும், எழும்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X