சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : டிச 04, 2019
Advertisement

மொபைல் திருடிய ஆறு பேர் சிக்கினர்

எஸ்பிளனேடு: பிராட்வேயைச் சேர்ந்தவர், நீரஜ்குமார், 31; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 24ம் தேதி, பிராட்வே பேருந்து நிலையம் அருகில், நடந்து சென்ற இவரிடமிருந்து, பைக்கில் வந்த இருவர், மொபைல் பறித்து தப்பினர். எஸ்பிளனேடு போலீசாரின் விசாரணையில், மணலியைச் சேர்ந்த ஜெகன், 22, மற்றும், 17 வயது சிறுவன் மொபைல் திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 15 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

கண்ணகி நகர்: காரப்பாக்கத்தைச் சேர்ந்தவர், முத்துகுமார், 24; ஐ.டி., ஊழியர். நவ., 29ம் தேதி இரவு, மகாத்மா காந்தி தெருவில் நடந்து சென்றார். அப்போது, நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி, முத்துகுமாரின் மொபைல் போனை பறித்தனர். கண்ணகி நகர் போலீசார் விசாரித்தனர். இதில், கண்ணகி நகரைச் சேர்ந்த ராஜன், 26, அசோக்குமார், 29, ராஜ்குமார், 26, அசோக், 29, ஆகியோர் என தெரிந்தது. நேற்று முன்தினம், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லாரி பேட்டரி திருடியோர் அகப்பட்டனர்

எண்ணுார்: எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர், சுரேஷ், 40; லாரி ஓட்டுனர். 1ம் தேதி, எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த, இவரது லாரியில் இருந்த பேட்டரிகள் திருட்டு போனது. எண்ணுார் போலீசார் விசாரித்தனர். இதில், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாபு, 31, வியாசர்பாடியைச் சேர்ந்த செல்லதுரை, 31, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

லாரி கிளீனருக்கு கத்திக்குத்து

புழல்: புழல் மத்திய சிறைச்சாலை அருகே, தனியார் லாரி புக்கிங் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அந்த அலுவலகத்திற்கு வெளியில், வடமாநில சரக்கு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதில், கிளீனர் விக்ரம் ஜோட்டா, 20, என்பவர் படுத்திருந்தார். நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில், அங்கு சென்ற மர்மநபர், கத்தியை காட்டி மிரட்டி, கிளீனரிடம் பணம் கேட்டார். அதற்கு, 'தன்னிடம் பணம் இல்லை' என, விக்ரம் ஜோட்டா கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மர்மநபர், அவரை கத்தியால் குத்தி தப்பினார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடையில் தீ விபத்து

சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார், பொன்னியம்மன் கோவில் தெருவில், சுரேஷ் என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, கடையில் இருந்த ஐஸ்கிரீம் பெட்டி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில், கடையின் ஒரு பாகம் முழுவதும் தீக்கிரையானது. துரைப்பாக்கம், திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது. செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாமூல் கேட்ட ரவுடிக்கு, 'காப்பு!

'மயிலாப்பூர்: மயிலாப்பூரில் உள்ள கடைகளில், அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி, மாமூல் கேட்டு மிரட்டுவதாக, வியாபாரிகள், மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாமூல் கேட்டு மிரட்டிய, பல்லக்கு மாநகரைச் சேர்ந்த ராஜா, 40, என்பவரை கைது செய்தனர்.

வாலிபரை கத்தியால் குத்தி பைக் பறிப்பு

கீழ்ப்பாக்கம்: புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர், மணிவண்ணன், 21. இவர், 1ம் தேதி இரவு, நண்பனின் இருசக்கர வாகனத்தை வாங்கி, அண்ணன் கமலை, கீழ்ப்பாக்கத்தில் இறக்கிவிட்டு, ராஜரத்தினம் தெரு வழியாக வீடு திரும்பியபோது, மர்ம நபர், 'லிப்ட்' கேட்டுள்ளார். மணிவண்ணன் டூ - வீலரை நிறுத்தியதும், மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால், மணிவண்ணனை குத்தி, டூ - வீலரை பறித்து தப்பினார். இது குறித்து கீழ்ப்பாக்கம்போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X