பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பூரில் அம்மா உணவகம் கிராம மக்கள் கோரிக்கை

Added : டிச 04, 2019
Advertisement

வேப்பூர்:வேப்பூரில் அம்மா உணவகம் திறக்க பயணிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பூர் ஊராட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், துணை மின் நிலையம், போலீஸ் ஸ்டேஷன், கூட்டுறவு வங்கி, வணிக வளாகங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள், தினசரி வந்து செல்கின்றனர். மேலும், இப்பகுதியிலிருந்து பல மாவட்டங்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.இந்நிலையில், பல கி.மீ., துாரம் பயணித்து வரும் பயணிகள், வாகன ஓட்டிகள், திட்டப் பயனாளிகள், தரமான உணவிற்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் வரை செலவிடுகின்றனர். செலவை குறைக்க கருதுவோர் தரமற்ற சுகாதாரமில்லாத உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலன் பாதித்து அவதியடைகின்றனர்.தமிழகத்தின் பல பகுதிகளில் அம்மா உணவகம் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்குவதை போல், வேப்பூரில் அம்மா உணவகம் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X