எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

முழு கொள்ளளவில் வீராணம் ஏரி; 25 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
தொடர் மழை காரணமாக, காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து, 25 க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால், வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து. முழு கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில், தற்போது, 1, 400 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
வீராணம் ஏரி,முழு கொள்ளளவு,கிராமங்கள், தண்ணீர், சூழ்ந்தது

தொடர் மழை காரணமாக, காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து, 25 க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால், வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து. முழு கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில், தற்போது, 1, 400 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து உள்ளதால், வீராணத்தில் இருந்து வெள்ளியங்கால் ஓடை மற்றும் வி.என்.எஸ்., மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வீராணத்தில் இருந்து தண்ணீர் வெறியேற்றப்படுகிறது.

வெள்ளியங்கால் ஓடை திறப்பு மற்றும் மனவாய்க்காலில் வரும் நீரால், வீரநத்தம், திருநாரையூர், குமராட்சி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் வீரநத்தம், சர்வராஜன் பேட்டை கிராமம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. நேற்று மழை குறைந்ததையடுத்து இன்று தண்ணீர் வடிந்து வருகிறது.


தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு


திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணை நிரம்பியது. நேற்று மாலை, வினாடிக்கு, 5,889 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து, 7,340 கன அடி நீர், தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஏற்கனவே, கடனாநதி உள்ளிட்ட அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரும், மழைநீரும் சேர்ந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரிய அணையான, 118 அடி உயரம் உடைய, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 96.40 அடியாக இருந்தது. நாளைக்குள், அணை 100 அடியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news
தஞ்சையில் தரைப்பாலம் மூழ்கியது


தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மாலை வரை மழையால், பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியது. பட்டுக்கோட்டை அருகே, நேற்று முன்தினம், கண்ணனாற்றில், உடைப்பு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கியது. இதனால், பட்டுக்கோட்டை - மதுக்கூர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அம்மாபேட்டை ஆகிய வட்டாரங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வயலில் தேங்கிய தண்ணீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அடிபம்பில் தானாக கொட்டிய தண்ணீர்


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் ஒரு வாரமாக, தொடர்மழை பெய்ந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம், வெகு உயர்ந்துள்ளது. திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம் உள்ள, அடிபம்பு குழாயில், நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, தண்ணீர் தானாக கொட்டியது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தண்ணீர் கொட்டியதாக, மக்கள் தெரிவித்தனர்.


latest tamil news
புளியமரம் வேரோடு சாய்ந்தது


அரியலுார் மாவட்டத்தில் நேற்று, 13 செ.மீ., மழை பெய்தது. பாக்கிநாதபுரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, 20 ஆண்டுக்கும் மேல் பழமையான, புளியமரம் வேரோடு சாய்ந்தது.


ஏரி மதகு உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர் நாசம்:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மீசநல்லுார் கிராமத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஏரி நிரம்பியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, ஏரியின் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, ஏரியில் இருந்து தண்ணீர், விளைநிலங்களுக்குள் பாய்ந்தது. இதில், 300 ஏக்கரில் நடவு செய்திருந்த நெற் பயிர்கள் மூழ்கின. வருவாய்துறை அதிகாரிகள், நேற்று காலை, மணல் மூட்டைகள் அமைத்து, உடைப்பை தற்காலிகமாக சரிசெய்தனர். மாவட்டத்தில், ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தன.


latest tamil news
கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, 30 ஆயிரம் கன அடி உபரிநீர், பவானி ஆற்றில், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.வெள்ள அபாய எச்சரிக்கை


தேனி மாவட்டம், வைகை அணையின் உயரம், 71 அடி. நீர் பிடிப்பு பகுதியில் மழை தொடர்வதால், நீர் வரத்தும் கணிசமாக இருந்தது. இதனால் அணை நீர் மட்டம், 66 அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையில் இருந்து, எந்த நேரத்திலும் கூடுதல் நீர் திறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதால், தேனி, திண்டுக்கல் மாவட்ட வைகை கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அணைக்கான நீர்வரத்து, வினாடிக்கு, 4,008 கன அடி; வெளியேற்றம், 360 கன அடியாக இருந்தது.

- நமது நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-டிச-201904:05:41 IST Report Abuse
 nicolethomson எனசரோச்மெண்ட் எவ்வளவு வேலை செய்யுது பாருங்க மக்களே , தயவு செய்து ஊரு பொதுச்சொத்தை , கோவில் சொத்துகளை விட்டுடுங்க அவை ஊரின் நலனுக்காக படைக்கப்பட்டவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X