சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் திடீர் பரபரப்பு

Added : டிச 04, 2019
Advertisement
 மாற்றுத்திறனாளிகள் ஊர்வலத்திற்கு  அனுமதி மறுத்ததால் திடீர் பரபரப்பு

கடலுார்:கடலுாரில் மாற்றுத்திறனாளிகள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

கடுமையாக பாதிக்கப்பட மாற்றுத்திறனாளியை திருமணம் செய்யும் நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிக்கு அறிவித்த 2,000 ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி, காலை 11:00 மணியளவில் மஞ்சக்குப்பம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக செல்ல சங்கத்தின் தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் சையத் முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் சுப்புராயன், குமரவேல், பரணிகுமார், சந்தோஷ் உட்பட 30க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் ஆயத்தமாயினர். தகவலறிந்த கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியாக கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுப்பதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X