பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் ஏரிகள் நீர் இருப்பு 4.5 டிஎம்சி ஆக உயர்வு

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை:தொடர் நீர்வரத்தால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு, 4.5 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி.,யாக உள்ள நிலையில், நவ., 30ம் தேதி நிலவரப்படி, நான்கு ஏரிகளிலும் சேர்த்து, 3 டி.எம்.சி., நீர் மட்டுமே இருந்தது. மூன்று நாட்களாக, விட்டுவிட்டு பெய்து வரும் மழையால், நான்கு ஏரிகளுக்கும் நீர்வரத்து கிடைத்து வருகிறது.

நேற்று முன்தினம் நான்கு ஏரிகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு, 4 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. நேற்றும், நீர்வரத்து தொடர்ந்தது. அதிகபட்சமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு, 2,427 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. செம்பரம்பாக்கத்திற்கு, 1,634 கனஅடி, புழலுக்கு, 668 கனஅடி, சோழவரத்திற்கு, 910 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. இதனால், ஒரே நாளில் நான்கு ஏரிகளிலும் சேர்த்து, 0.54 டி.எம்.சி., நீர்வரத்து கிடைத்துள்ளது. நீர் கையிருப்பு 4.54 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X