சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழுதுார் அணைக்கட்டு: கலெக்டர் ஆய்வு

Added : டிச 04, 2019
Advertisement
 தொழுதுார் அணைக்கட்டு: கலெக்டர் ஆய்வு

திட்டக்குடி:தொழுதுார் அணைக்கட்டு, வெலிங்டன் நீர்தேக்கம் மற்றும் தடுப்பணைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை, கடலுார் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

பெரம்பலுார் கல்லாற்றின் வழியாக தொழுதுார் அணைக்கட்டிற்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வர துவங்கியது. இதையடுத்து தொழுதுார் அணைக்கட்டிலிருந்து வெலிங்டனுக்கு 2 ஆயிரத்து 918 கன அடி நீரும், வெள்ளாற்றில் 3 ஆயிரத்து 735 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. நேற்று வெலிங்டனுக்கு 2 ஆயிரத்து 918 கனஅடி நீரும், வெள்ளாற்றில் 543 கனஅடியும் திறந்து விடப்பட்டது.கலெக்டர் அன்புசெல்வன், நேற்று, தொழுதுார் அணைக்கட்டு, கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கம் ஆகியவற்றை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கீழ்ச்செருவாய் மற்றும் கூடலுார் கிராமங்களின் அருகே வெள்ளாற்றில் கட்டப்பட்டுவரும் தடுப்பணைகளையும் ஆய்வு செய்தார்.விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவின்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிமோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.ரூ. 10 ஆயிரம் அபராதம்திட்டக்குடி வெள்ளாற்று பாலத்தின் கீழே குப்பைகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்து, பேரூராட்சி செயல்அலுவலரிடம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அறிவுறுத்தினார். அப்போது ஆற்றின் கரையில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதை பார்த்த கலெக்டர், அது குறித்து விசாரித்தார்.அருகிலிருந்து பழைய இரும்பு கடை நடத்தும் ஒருவர் குப்பைகளை கொட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அந்த கடைக்காரருக்கு பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். பேரூராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து, ரசீதை தனக்கு அனுப்பவும் அறிவுறுத்தினார்.வேப்பூர்வேப்பூர் அருகே மேமாத்துார் அணைக்கட்டு திறந்ததை, கலெக்டர் அன்புச்செல்வன் பார்வையிட்டார்.கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால், மயூரா மற்றும் கோமுகி ஆற்றிலிருந்து மணிமுக்தாறுக்கு தண்ணீர் வருகிறது. இதனால், வேப்பூர் அருகே உள்ள மேமாத்துார் அணைக்கட்டு நிரம்பி 380 கன அடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று பார்வையிட்டு, நீர்வரத்தின் அளவு, அணைக்கட்டின் உறுதி, பாசன வசதி பெறும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தார்.சப் - கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார்கள் கமலா, கவியரசு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் உமா, வருவாய் ஆய்வாளர் பழனி, உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X