பராமரிப்பில்லாத பண்ருட்டி பூங்கா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத பண்ருட்டி பூங்கா

Added : டிச 04, 2019
 பராமரிப்பில்லாத பண்ருட்டி பூங்கா

பண்ருட்டி:பண்ருட்டி காந்தி பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி வீணாகி உள்ளது.
பண்ருட்டி நகராட்சி முதல் நிலை நகராட்சியாக உள்ளது. நகரத்தில் ஒரே ஒரு பூங்கா, சிறுவர் விளையாட்டு திடலாக, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் பரப்பளவு 20 சென்ட். இயற்கை காற்று வராத அளவிற்கு நான்கு புறமும் வணிக வளாக கட்டடங்கள் நிறைந்துள்ளன.மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே செயல்படும் இந்த பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாடும் சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் எல்லாம் வீணாகி உள்ளன. விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.பூங்காவை பராமரிக்க நகராட்சி ஊழியர்கள் இருந்தாலும் யாரும் சரி செய்வதில்லை. இதனால் சிறுவர்கள் கடலுாரில் உள்ள பீச், பூங்கா போன்ற நகரத்தில் உள்ள பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X