பொது செய்தி

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டை பேரூராட்சி தூர்வாரும் பணி

Added : டிச 04, 2019
Advertisement

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், வடிகால் வாய்க்கால்கள் பொக்லைன் மூலம் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், வாத்தியாப்பள்ளி தெரு, காயிதே மில்லத் நகர், பாத்திமா நகர், டில்லி சாகிப் தர்கா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள், தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால், பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைக்க, வாய்க்கால்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணி நடந்தது. இப்பணியை, செயல் அலுவலர் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளர் ஜோதி, துப்புரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X