கம்மாபுரம்:கம்மாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், எச்.ஐ.வி., நோய் குறித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி தலைமை தாங்கினார். டாக்டர்கள் அருண்ராஜ், ரகுராமன், ஐ.சி.டி.சி., ஆலோசகர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வக நுட்புனர் சிவக்குமார், சுகாதார நிலைய ஊழியர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.இதில், எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன்; அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன்; எச்.ஐ.வி., தொற்று இல்லாத சமுதாயத்தை உருவாக்குவேன் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.