பொது செய்தி

தமிழ்நாடு

உலக எய்ட்ஸ் தினம் உறுதி மொழி ஏற்பு

Added : டிச 04, 2019
Advertisement
 உலக எய்ட்ஸ் தினம்  உறுதி மொழி ஏற்பு

கடலுார்:கடலுார் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, கடலுார் அரசு மருத்துவமனை கூட்ட அரங்கில் எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட திட்ட மேலாளர் தேவ் ஆனந்த் வரவேற்றார். எய்ட்ஸ் காட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் கீதா தலைமை தாங்கினார். இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்பாபு, தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பொறுப்பு டாக்டர் பிரேமா, காசநோய் பிரிவு துணை இயக்குநர் கருணாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பரிமேலழகர், ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன், எச்.ஐ.வி.,உள்ளோர் சங்க தலைவர் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர். காசநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X