பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை

Added : டிச 04, 2019
Advertisement

கடலுார்:மீனவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் திருமுகம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ' தமிழகத்தில் 13 கடற்கரை மாவட்டங்கள் உள்ளது. கடற்கரை கிராம மீனவர்கள் உள்நாட்டு மீனவர்கள என தமிழகத்தில் ஒரு கோடி பேர் உள்ளனர். மீன்பிடி தொழிலில், உலகில் 3 வது இடத்தில் உள்ளது.நாட்டில் உள்ள 61 சதவீதம் மீனவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். முதுமையில் அவர்களால் மீன் பிடி தொழில் செய்ய இயலாது. எனவே, அவரது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X