சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வீட்டில், 'ரெய்டு'

Added : டிச 04, 2019
Share
Advertisement
சென்னை:செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வீட்டில், ஜி.எஸ்.டி., நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன்; தி.மு.க., பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் மதுசூதனன். இவர், 'மேன் பவர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இவரது

சென்னை:செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வீட்டில், ஜி.எஸ்.டி., நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன்; தி.மு.க., பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் மதுசூதனன். இவர், 'மேன் பவர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இவரது
நிறுவனத்தை சேர்ந்த ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர், ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரியை முறையாக செலுத்தவில்லை என, சென்னை மண்டல ஜி.எஸ்.டி., நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதன் அடிப்படையில், மறைமலை நகரில் உள்ள வரலட்சுமி மதுசூதனன் வீட்டில், நேற்று பிற்பகல் முதல், நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை
நடத்தினர்.இதில், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, அவரது அலுவலகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள்

திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X