பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வளர்ப்பு செயல் விளக்கம்

Added : டிச 04, 2019
Advertisement
 மீன் வளர்ப்பு செயல் விளக்கம்

கடலுார்:கடலுார் அடுத்த காரணப்பட்டு கிராமத்தில் பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு செயல் விளக்கம் வழங்கப்பட்டது.

கடலுார் அடுத்த காரணப்பட்டு கிராம விவசாயி சந்திரகாசன், இரண்டு ஏக்கர் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்த்து வருகிறார். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்கம் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், மீன் வளர்க்க தேவையான இடுபொருட்களை செயல் விளக்கமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்படி ஒரு ஏக்கர் பண்ணை குட்டையில் 8 அங்குலம் அளவுள்ள கட்லா, ரோகு, புல்கெண்டை உள்ளிட்ட 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன் குஞ்சுகள் குட்டையில் விடப்பட்டது. உணவாக கருக்காய், தவிடு, கோதுமை தவிடு ஆகியவை வழங்கப்பட்டது.கடலுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகவன் பேசுகையில், ' விவசாயிகள் வருமானத்தை பெருக்க விவசாயம் சார்ந்த கால்நடை, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு , பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய தொழில்நுட்ப பயிற்சிகளை வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என கூறினார்.வட்டார தொழில் நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழிநுட்ப மேலாளர்கள் அருண்ராஜ், கண்ணன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X