பொது செய்தி

தமிழ்நாடு

மலையாண்டவர் கோவிலில் கும்பாபிேஷக விழா

Added : டிச 04, 2019
Advertisement
 மலையாண்டவர் கோவிலில் கும்பாபிேஷக விழா

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில், 3ம் ஆண்டு கும்பாபிேஷக விழா நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் திங்கள்கிழமை 3ம் ஆண்டு கும்பாபிேஷக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், அம்மன்,சண்டிகேஸ்வரர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.இரவு 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. சுவாமி ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X