நடிகைக்கு மிரட்டல் போலீசில் புகார்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை:கணவரின் கள்ளக்காதலி கொலை மிரட்டல் விடுப்பதாக, 'டிவி' நடிகை ஜெயஸ்ரீ, போலீசில் புகார் அளித்துள்ளார்.
'கல்யாண பரிசு' உள்ளிட்ட, 'டிவி' தொடர்களில் நடித்தவர், ஈஸ்வர் ரகுநாத். இவரும், நடிகை ஜெயஸ்ரீயும் காதலித்து திருமணம் செய்தனர்; ஒரு மகள் உள்ளார். இவர்கள், திருவான்மியூர், எல்.பி., சாலையில் வசித்து வருகின்றனர்.

ஈஸ்வர் ரகுநாத், மனைவி ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து, 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 40 சவரன் நகைகளையும் அடகு வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன், ஈஸ்வர் ரகுநாத், மனைவியை கடுமையாக தாக்கி உள்ளார். ஜெயஸ்ரீ, அடையாறு காவல்
நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஈஸ்வர் ரகுநாத்தை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று ஜெயஸ்ரீ, புதிய புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் கூறியதாவது:என் கணவர், போதையில் இருக்கும்போது, பூஜை
அறையில் சிறுநீர் கழிப்பது; குழந்தையாக உள்ள, என் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவது என, 'சைக்கோ' போல நடந்து கொண்டார். அவருக்கு, மகாலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது; இதை கண்டித்தேன்; அடித்துதுன்புறுத்தினார்.

அவரை சிறையில் அடைப்பதற்கு காரணமாக இருந்ததற்காக, மகாலட்சுமி மற்றும் மர்ம
நபர்கள் சிலர், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்; அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், என் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு ஜெயஸ்ரீ
கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X