பொது செய்தி

தமிழ்நாடு

வீரட்டானேஸ்வரர் கோலில் சோமவார சிறப்பு வழிபாடு

Added : டிச 04, 2019
Advertisement
 வீரட்டானேஸ்வரர் கோலில் சோமவார சிறப்பு வழிபாடு

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், கார்த்திகை மாதம் 3வது திங்கள் கிழமை, மூன்றாவது சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது.
பிற்பகல் 2:00 மணிக்கு அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு ஆகமவிதிப்படி வலம்புரி, இடம்புரி 108 சங்காபிஷேகம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர் வெள்ளி நாகாபரண சிறப்பு அலங்காரத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தனர்.இரவு 9:00 மணிக்கு உற்சவர் வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X