விருத்தாசலம்:உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நன்னடத்தை விதிகள் அமலானதால், விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டி, சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கும், என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், தேர்தல் நன்னடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமலானது.இதனால், அரசு விழாக்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. மேலும், விருத்தாசலம், பெரியார் நகரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும், கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,வின் உதவியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.அதைத் தொடர்ந்து, நேற்று காலை 10:00 மணியளவில், துணை பி.டி.ஓ., சிவா முன்னிலையில் எம்.எல்.ஏ., அலுவலக வாயிற்கதவு பூட்டி, சீல் வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE