தமிழ்நாடு

29 மாநிலங்களின் திருநங்கையர் மணப்பெண் அலங்கார அணிவகுப்பு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement
  29 மாநிலங்களின் திருநங்கையர் மணப்பெண் அலங்கார அணிவகுப்பு

சென்னை:உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, 29 மாநிலங்களைச் சேர்ந்த, 29
திருநங்கையர் பங்கேற்ற, மணப்பெண் ஆடை அலங்கார அணிவகுப்பு, சென்னையில் நடந்தது.

திருநங்கையருக்கான சமூக அமைப்பு மற்றும் சென்னை அழகுகலை நிபுணர் அமைப்பு இணைந்து, 'மங்கையும், நங்கையும்' என்ற, உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தின.
திருநங்கையரை அடையாளப்படுத்தும் விதமாக, இந்தியாவில் உள்ள, 29 மாநிலங்களைச் சேர்ந்த, 29 திருநங்கையரை தேர்வு செய்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


ஆடை வடிவமைப்பு



உலகிலேயே முதல் முறையாக, சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, பீஹார், உத்தர பிரதேசம், அசாம், திரிபுரா, கோவா உள்ளிட்ட, 29 மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கையர், அந்தந்த மாநில பாரம்பரிய உடையில், மணப்பெண் ஆடை அலங்காரத்தில் அணிவகுப்பு நடத்தினர்.இவர்களுக்கு, சென்னையைச் சேர்ந்த, 29 அழகுகலை பெண் நிபுணர்கள், ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்காரம் செய்தனர்.
மணப்பெண் ஆடை அலங்கார நிகழ்ச்சியை, ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த, அழகுகலை நிபுணர் அமைப்பு தலைவர் மீனாட்சி கூறியதாவது:
தமிழகத்தில், திருநங்கையருக்கு, உரிய மரியாதை தருவதில்லை. அவர்களை, பஸ், ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் நபர்களாக பார்க்கின்றனர். இல்லையெனில், பாலியல்
உணர்வுடன் பார்க்கின்றனர்.


அங்கீகாரம்

அவர்களை, ஒரு மனிதராக கூட பார்ப்பதில்லை. ஆணாக பிறந்து, பெண்ணாக மாறிய
அவர்களிலும், எத்தனையோ சாதனையாளர்கள் உள்ளனர். நீதிபதி, வக்கீல், போலீஸ், சமூக சேவகர்கள் என, பலர் உள்ளனர்.அவர்களுக்கு அரசு, மூன்றாம் பாலினமாக, திருநங்கையர் என, அங்கீகாரம் வழங்கியுள்ளது.திருநங்கையரை அடையாளப்படுத்தும் விதமாகவும், 'டிரம்ஸ்' உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யவும், இந்நிகழ்ச்சியை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
04-டிச-201915:50:03 IST Report Abuse
Sampathkumar Sampath நாங்களும் மதிக்கத்தான் செய்கிறோம். ஆனால் நீங்க செய்யற அழும்புக்கு அளவே இல்லை. மும்பை போற ரயிலில் ஒருவன் காசு கொடுக்க வில்லையென்றால் நீ கட்டையில் போக , அதுல போக, இதுல போக என்றெல்லாம் அவர்களை சபிப்பதா ? நீங்கள் மட்டும் என்ன கட்டையில் போகாமல் கழுதைமேலயா போவீங்க ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X