சாய்ந்த மரம் அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாய்ந்த மரம் அகற்றம்

Added : டிச 04, 2019

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லையில் வேரோடு சாய்ந்த மரம் அகற்றப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.

சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையினால், கிராமத்திற்குள் செல்லும் சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதனால் வெய்யலுார் சாவடி, வாழைக்கொல்லை பஸ்நிறுத்தம் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மேலும், கிராமத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதை அடுத்து மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டன.தொடர்ந்து மின்துறையினர் சாய்ந்து முறிந்து விழுந்த மின்கம்பத்தினை அகற்றி விட்டு, புதிய கம்பங்கள் புதைக்கும் பணியினை நேற்று மேற்கொண்டனர். துண்டான மின்கம்பியினை இணைத்து மின்சாரம் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X