சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை, பலி

Added : டிச 04, 2019
Advertisement

லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு

பூந்தமல்லி: குன்றத்துார் அடுத்த பூந்தண்டலம், டி.சி.நகரைச் சேர்ந்தவர், வரதராஜன், 50; பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, குன்றத்துார், சிறுகளத்துார் அருகே, பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், வரதராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, லாரி ஓட்டுனரான, சாந்தராஜ், 54, என்பவரை கைது செய்தனர்.

குடும்ப தகராறால் வாலிபர் தற்கொலை

அரும்பாக்கம்: அரும்பாக்கம், அசோகா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், 37. இவரது மனைவி ரெஜினா, 36. கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆவடி, திருமுல்லைவாயலில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு, நேற்று முன்தினம் ரெஜினா சென்றார்.
பின், இரவு கணவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது,அவர் போன்
எடுக்கவில்லை.இதையடுத்து, சூளைமேட்டில் உள்ள தன் உறவினர், மதுரை வீரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, தினேஷ் குமார் துாக்கிட்டு
தற்கொலை செய்தது தெரிந்தது. அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் மோதி வாலிபர் பலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 49; பா.ம.க., திருவொற்றியூர் நகர முன்னாள் துணைச் செயலர். இவரது மகன் வினோத்குமார், 22; தனியார் நிறுவன ஊழியர். நேற்று, வினோத்குமார் தன் பைக்கில், கே.வி.குப்பம் அருகே
சென்றபோது, அவ்வழியே அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத பைக்,
வினோத் குமாரின் பைக் மீது மோதி, மின்னல் வேகத்தில் சென்றது.இதில் படுகாயமடைந்த வினோத்குமார்,தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். மாதவரம்
போக்குவரத்துபுலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மோதி கூலித்தொழிலாளி மரணம்

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் வசித்தவர் மோகன், 55; தொழிலாளி. இவர், நேற்று மாலை, 4:30 மணி அளவில், சைக்கிளில், செங்குன்றத்திற்கு சென்றார். அப்போது, அங்குள்ள அரிசி ஆலைக்கு சென்ற லாரி மோதி, கீழே விழுந்தார். எதிர்பாராதவிதமாக, லாரி
சக்கரத்தில் தலை நசுங்கி பலியானார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X