சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 04, 2019
 சோழவரம் ஏரிக்கு  நீர்வரத்து அதிகரிப்பு

சோழவரம்:கன மழையால், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு, 910 கன அடி நீர்வரத்து கிடைத்து வருகிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது.கடந்த அக்டோபர் மாத இறுதியிலும், நவம்பர் மாத துவக்கத்திலும் பெய்த மழையால், 0.23 டி.எம்.சி., நீர் தேங்கியது.சோழவரம் ஏரியில் தேங்கிய தண்ணீரை, கடந்த மாதம், 5ம் தேதி முதல், புழல் ஏரிக்கு கொண்டு செல்லும் பணிகள் துவங்கின.அதே நேரத்தில் மழை நின்றதால், ஏரிக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை.

கடந்த, 30ம் தேதி நிலவரப்படி ஏரியில், 0.09 டி.எம்.சி., மட்டுமே இருந்தது.இரண்டு நாட்களாக ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி களில், 17 செ.மீ., மழை பெய்ததால், நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. நேற்று காலை, நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு, 910 கன அடி நீர்வரத்து கிடைத்தது. இதனால் ஏரியின் நீர் கையிருப்பு, 0.20 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஏரியில் இருந்து வினாடிக்கு, 100 கன அடி நீர், புழல் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மழை தொடர்வதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X