பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஏற்பாடுகள் கலெக்டர் ஆலோசனை

Added : டிச 04, 2019
Advertisement

திருவள்ளூர்:ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து, அதிகாரிகளுடன், கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் இறுதியில், இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டருமான மகேஸ்வரி, தலைமை வகித்து பேசியதாவது:மாநில தேர்தல் ஆணையத்தால், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக, டிச., 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய, 24 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 230 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 526 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 3,945 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த அறிவிப்பால், ஊரகப் பகுதிகளுக்கு, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேர்தல்- உள்ளாட்சி பிரிவு லதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X