மப்பேடு:மப்பேடு அருகே, பணியிட மாற்றத்தை ரத்து செய்ய, தனியார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மப்பேடு அடுத்த, உளுந்தை கிராமத்தில் இரும்பு சம்பந்தமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 15க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தொழிற்சாலை நிர்வாகத்தினர், 42 ஒப்பந்த தொழிலாளர்களை, அம்பத்துார் அருகே உள்ள பட்டரவாக்கம் பகுதியில் உள்ள தன் மற்றொரு தொழிற்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த பணியிட மாற்றத்தை கண்டித்து, ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று தொழிற்சாலை முன், அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மப்பேடு போலீசார் பேச்சு நடத்தினர். சமரசம் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடந்தது.