பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் 179 ஏரிகள் நிரம்பின

Added : டிச 04, 2019
Advertisement
 திருவள்ளூர் மாவட்டத்தில் 179 ஏரிகள் நிரம்பின

திருவள்ளூர்:வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில், 179 ஏரிகள், நுாறு சதவீதம் நிரம்பின. மீதம் உள்ள ஏரிகளில், பாதிக்கு மேல் நிரம்பி உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், 576 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 654 சிறு அளவிலான ஏரிகளும் உள்ளன. மேலும், 3,227 குளம், குட்டைகள் உள்ளன.இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு, குடிமராமத்து மற்றும் நீர்நிலைகள் துார் வாரும் திட்டத்தின் கீழ், 1,212 ஏரி, குளம் மற்றும் குட்டைகளில், பணிகள் நடைபெற்றன.இவற்றில் பெரும்பாலான நீர்நிலைகளில், பணிகள் நிறைவடைந்து விட்டன. சமீப காலமாக பெய்து வரும் தொடர் மழையால், ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதுகுறித்து, கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள, 576 ஏரிகளில், 117 ஏரிகள் முழு அளவும்; 75 ஏரி, 75 சதவீதம்; 132 ஏரி, 50 சதவீதத்திற்கு மேலும், 165 ஏரிகள், 50 சதவீதத்திற்குள்ளும் தண்ணீர் நிரம்பி உள்ளன. ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள, 654 ஏரிகளில், 62 ஏரிகள் முழு கொள்ளளவும், 158 ஏரி, 75 சதவீதம்; 208 ஏரி, 50 சதவீதமும், தண்ணீர் நிரம்பி உள்ளன.மேலும், 3,227 குளம், குட்டைகளில், 308 முழு அளவும்; 868 நீர்நிலைகள், 75 சதவீதமும், 762 நீர்நிலைகள், 50 சதவீதமும் நிரம்பி உள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X