வழிப்பறி திருடர்கள் சிக்கினர்
மீஞ்சூர்: மீஞ்சூர் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படையினர், நேற்று முன்தினம் இரவு, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலம் அருகே, சந்தேக நபர்கள் மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களை சோதனை செய்தபோது, எட்டு மொபைல் போன்கள், 2,000 ரூபாய், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை இருந்தன.தொடர் விசாரணையில், அவர்கள், போரூர், அய்யப்பன்தாங்கல் சத்யா, 19, கொருக்குப்பேட்டை பிரசாந்த், 22, எர்ணாவூர் சமீர், 29, என்பதும், பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.அதை தொடர்ந்து, மீஞ்சூர் போலீசார், மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சமையல்காரர் மர்ம சாவு
திருத்தணி:
திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில், 50 வயது மதிக்கத்தக்க
ஆண்
‑ஒருவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து, கோவில் மக்கள்
தொடர்பு அலுவலர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு
சென்று, ஆண் பிணத்தை மீட்டு, விசாரணை நடத்தினர்.அப்போது, இறந்த ஆணின்
சட்டை பையில், ஒரு துண்டு சீட்டு மற்றும் பாக்கெட் நோட்டு இருந்தது. அதில்,
இருந்த ஒரு மொபைல் போன் நம்பர் மூலம் தொடர்பு கொண்டனர்.
அப்போது, இறந்தவர்
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பாலு, 50, என்றும், சில மாதங்களாக,
திருத்தணியில் கல்யாண சமையல்காரர்களுடன் சேர்ந்து சமைத்து வந்ததும்,
குடிப்பழக்கம் உள்ளதும் தெரிய வந்தது.மேலும், அதிகளவில் மது குடித்ததால்
இறந்து விட்டதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.